3466. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்து சென்றான். அப்பெண், 'இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும் வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே' என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை, 'இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கி விடாதே' என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளுடைய) மார்பில் பால் குடிக்கலானது. பிறகு (தரையில்) இழுபட்டுக் கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்து சென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட்டுப் பொருளாக நடத்திக் கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே' என்று பிரார்த்தித்தாள். உடனே அக்குழந்தை, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு' என்று பிரார்த்தித்து. பிறகு அது, 'வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் 'இவள் விபசாரம் செய்கிறாள்' என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறுகிறாள். அவர்கள், 'இவள் திருடுகிறாள்' என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறுகிறாள்' என்று ((அக்குழந்தை) சொல்லிற்று.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60
No comments:
Post a Comment