Thursday, October 13, 2016

வேதம் சொல்லும் வெட்டுக் கிளி இஸ்லாமே..

வேதம் சொல்லும் வெட்டுக் கிளி இஸ்லாமே..























மெய்யான தேவனாகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் இஸ்லாமின் தோற்றம் குறித்தும், இஸ்லாமிய சாம்ராஜ்ய வீழ்ச்சி குறித்தும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..

வெளிப்படுத்தின விசேஷம் 9ஆம் அதிகாரம் வசனம் | முதல் 21 வரையில் வாசிக்கவும்.

இவற்றை வாசித்ததற்குப் பிறகு பின் வரும் விளக்கத்தை வாசிக்கவும்.

🌟 வெளிப்படுத்தின விசேஷம் என்ற வேதாகம இறுதிப் புத்தகத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலுவையில் அறையப்பட்ட வரும், மகா பிரதான ஆசாரியருமாகிய இயேசு கிறிஸ்துவையும், பரலோக தேவாலயத்தையும், அங்கு நடந்து கொண்டிருப்பவற்றையும், அவற்றின் விளைவாக பூலோகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.

வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களில், சிலுவை என்ற பலிபீட இரத்தத்தின் வழியாய் தோன்றிய ஏழு சபைகளைக் காண்கிறோம்'

1⃣ முதல் சபை : எபேசு _ _ கி.பி. 31 - 101

2⃣ இரண்டாம் சபை : சிமிர்னா - - கி.பி. 101 - 313

3⃣ மூன்றாம் சபை : பெர்கமு - - கி.பி. 313 - 538

4⃣ நான்காம் சபை : தியத்தீரா - - கி.பி. 538 - 1563

5⃣ ஐந்தாம் சபை : சர்தை - - கி.பி. 1563 - 1798

6⃣ ஆறாம் சபை : பிலதெல்பியா கி.பி. 1798 - 1844

7⃣ ஏழாம் சபை : லவோதிக்கேயா கி.பி. 1844 - .... ?

மேற்காணும் ஏழு சபைகளில், முதலாம் சபையின் காலம்
தொடங்கிய போது, பரலோகத்தில் தேவனுடைய தேவாலயம்
திறக்கப்பட்டது, அப்பொழுது தேவாலயத்தில் தேவாதி தேவன் எழுந்தருளியுள்ள காட்சியை நான்காம் அதிகாரம்
விவரிக்கிறது. அப்பொழுது, தேவனுடைய திருக்கரங்களில்
ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்த ஒரு புத்தகம்
இருப்பதையும், எவராலும் முத்திரையை உடைத்து திறக்க
இயலாத அப்புத்தகத்தை ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு
கிறிஸ்து, அந்த புத்தகத்தை வாங்கி, ஒவ்வொரு முத்திரையாக உடைக்கத் தொடங்கினார் என்பதையும் வாசிக்கிறோம்.

🌟 ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு சபையின் காலத்தில் உடைக்கப்படுகிறது' - அப்பொழுது, பூலோகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. இவற்றை நான்காம் அதிகாரம் முதல் ஏழாம் அதிகாரம் வரை வாசிக்கலாம்.

💥 ஏழு முத்திரையின் காலத்திலேயே ஏழு தூதர்கள் ஏழு எக்காளங்களை ஊதினார்கள். (வெளி :8:2) ஒவ்வொரு தூதர்களும் எக்காளம் ஊதும் போது, ரோம சாம்ராஜ்யத்தின் முடிவில் அதற்கு எதிராக ஒவ்வொரு கலகங்கள் எழுந்ததையும் அவைகள் ராஜ்யங்களாக மாறியதையும் வரலாற்றில் காணலாம்.

💥 குறிப்பாக ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினபோது முதலாம் ஆபத்து எற்பட்டது. இதன் காலம் கி.பி.632 - 1449 இதை 9-ஆம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் வாசிக்க வேண்டும்.

1⃣ ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து பூமியின் மேல் ஒரு நட்சத்திரம் விழுந்தது.(தூதன் வானத்திலிருந்து இறங்கினான்)

2⃣ அவனுக்கு பாதாளக் குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாள குழியை திறந்தான்.

3⃣ அப்பொழுது பாதாளத்திலிருந்து பெரும் சூளையின் பெரும் புகை எழும்பியது. அது சூரியனையும் ஆகாயத்தையும் மறைத்தது. அந்த புகையில் இருந்து வெட்டு கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வந்தது. அது பூமியின் பயிர்களையெல்லாம் நாசம்படுத்தியது.

4⃣ வெட்டு கிளிகள் என்பவை இஸ்லாமிய சேனைகள் - இந்த சேனைகளின் ராஜாவே பாதாளத்தின் தூதன், இவனுக்கு அபத்தோன் என்றும், அப்பொல்லியோன் என்றும் பெயர். இஸ்லாமியம் உருவாகியதற்கு யார் காரணமோ அவருடன் இந்த பெயரை பொருத்திக் கொள்ள வேண்டும் - இதனை சராசன் என்றும் கூறுவார்கள்.

மேலும் அரேபியர்களை வெட்டு கிளிகளுக்கு ஒப்பாகவே வேதம் சொல்கிறது..

நியாயாதிபதிகள்
7 அதிகாரம்

12. மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.


5⃣.632 இல் தொடங்கி 1449 வரை 8 நூற்றாண்டுகள் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாய் பரவிய இஸ்லாமிய வெட்டு கிளிகளின் மூலம் முதலாம் ஆபத்தின் காலம் கடந்து சென்றது.

6⃣ இப்பொழுது இரண்டாம் ஆபத்தின் காலம் தொடங்கியது. இரண்டாம் ஆபத்தின் காலம் என்பது கி.பி.1449 முதல் 1840 வரையில் ஆகும். இந்த காலத்தில் இஸ்லாமிய வெட்டு கிளிகள் கிழக்கு ரோமசாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து துருகி ஒட்டமான் சாம்ராஜ்யத்தை எற்படுத்தியது.

7⃣ ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான் (வெளி: 9 : 13) அப்பொழுது ஐப்பிராத்து என்னும் நதி கரையில் கட்டப்பட்டுள்ள நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொரு பங்கைக் கொல்லும் படிக்கு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும் ஒரு வருஷத்திற்கும். ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள்.

8⃣ ஒருவருஷம், ஒரு மாதம், ஒரு நாள் , ஒரு மணி நேரம் என்ற கால கணக்கு 391 வருஷம் 15 நாட்களாகும் . இந்த கணக்கை ஆறாம் சபையின் வில்லியம்மில்லர் இயக்கத்தை சேர்ந்த ஜோசியா லிச் என்பவர் தனக்கு வெளிப்பட்ட தரிசனத்தின் படி கணக்கிட்டார் - இந்த கணக்கை 26 - 7 -
1449 - இல் தொடங்கி 11-8 - 1840ல் முடித்தார். அந்த நாளில், துருகி ஒட்டமான் சாம்ராஜ்யம் 11- 8 - 1840-யில் வீழ்ச்சி அடையும் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தார். இவ்வாறு அவர் முன் அறிவித்தபடியே 1840-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இஸ்லாமிய துருக்கி சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது. .அப்பொழுது இரண்டாம் ஆபத்து கடந்து சென்றது.

9⃣ இங்கு நாம் இரண்டு உண்மைகளை கவனிக்க வேண்டும். மாபெரும் ரோம சாம்ராஜ்யம் கிழக்கு, மேற்கு சாம்ராஜ்யங்களாய் பிரிந்த போது, மேற்கு சாம்ராஜ்யத்தை கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் கத்தோலிக்க கிறிஸ்துவ மத .சாம்ராஜ்யமாய் மாற்றிய சக்தி ஏதுவோ , அதுவே கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தை இஸ்லாமிய சாம்ராஜ்யமாய் மாற்றியது.மேற்கு ரோமசாம்ராஜ்யம் கிறிஸ்துவ மத .சாம்ராஜ்யமாய் மாறி கி.பி 1798-யில் வீழ்ச்சியடைந்தது. அது போலவே கிழக்கு ரோம சாம்ராஜ்யம் இஸ்லாமிய துருக்கி மத சாம்ராஜ்யமாய் மாறி 1840-யில் வீழ்ச்சியடைந்தது. (துருக்கி = துருக் - இதிலிருந்து துலுகர் என்ற வார்த்தை வந்தது. )

1⃣0⃣ ஆறாம் எக்காளத்தின் முடிவில் ஏழாம் எக்காளத்தின் காலத்தில் மூன்றாம் ஆபத்து வர இருக்கிறது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலேயே, 10-ஆம் அதிகாரத்தில் சிறு புஸ்தகம் திறக்கப்பட்டது. சிறு புஸ்தகத்தின் காலம் என்பது, நியாய விசாரனையின் காலமாகும். நியாய விசாரனையின் காலம் தொடங்கி 172 காலம் ஆகி விட்டன. ஆகவே, பிதாவாகிய தேவாதி தேவனின் திருக்கரத்தில் இருந்ததும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருக்கரத்கிற்கு மாறி முத்திரைகள் உடைக்கப்படுவதும் ஆகிய புஸ்தகத்தில் அடங்கியுள்ள கடைசி கால நிகழ்வுகளின் காலத்தில் நாம் வாழ்கிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தின் மூலம் இவற்றை வெளிப்படுத்துப்பவராகிய இயேசு கிறிஸ்து, இறுதி கால ஏழாம் சபையின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார்.

💥 ஆண்டவராகிய இயேசுவே, சீக்கிரமாய் வாரும். ஆமென்.

இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த சைட்டில் சென்று பார்க்கவும்..

http://christianitybeliefs.org/islam-in-bible-prophecy/the-fifth-trumpet-of-revelation-islam-muslims/

No comments:

Post a Comment