Sunday, February 14, 2016

சுன்னி இஸ்லாத்தில் ஓரினசெயர்க்கையை கடைபிடித்த சில பிரிவுகள்




” அடபிராக்கள் (என்போர்) ,ஹிஜ்ரி ஆண்டு 322இல்,அல் ராதி இப்னு அல்-முக்தடீர் ஆட்சியின் போது,பக்தாத்துக்கு வருகை தந்த ஆடவரை பின்பற்றுபவர்கள்,அவ்வாடவன் இப்னு அபி அடபீர் என்று அழைக்கப்பட்டான்,அவன் பெயர் முஹம்மது பின் அலி அல்-ஷெல்மகானி (என்பதாகும்), தூய ஆவி தன் உடலின் மூலம் அவதரித்துவிட்டதாக கூறி தன்னை தூய ஆவி என்று அழைத்துக் கொண்டான்.”ஆறாம் அறிவு” எனும் நூலை தன் விசுவாசிகளுக்கு இயற்றினான், (அந்த நூலில்) ஷரியா சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் ஓரினசெயற்கையைத் தான் அங்கீகரிப்பதாகவும் உள்ளது. ஆசனவாய்வழி புணர்ச்சி (sodomy) (என்பது) ஆச்சாரமிக்க மனிதனிடத்திலிருந்து ஆச்சாரம் குறைவான மனிதனிடத்தில் ஒளியை செலுத்த உதவும் ஒரு முறை என்றான். “ [ சுன்னிய இஸ்லாமிய பண்டிதர் அப்துல் கஹீர் பக்தாதியின் ” அல் பர்க்கு பயின் அல்-பிரக்கு” ( al-Farq bayn al-Feraq),பக்கம் 217 ]
ஆக இந்த சுன்னி இஸ்லாமிய உலமாவின் நூலின்வழி,சுன்னி இஸ்லாத்தில்,ஓரினசெயர்க்கையை கடைபிடித்த கூட்டம் பொது ஆண்டு 944லேயே இருந்துள்ளது என்று அறியமுடிகிறது.ஆக இஸ்லாத்து ஓரின செயர்க்கையை எதிர்க்கும் மதம் என்பதெல்லாம் சமீபத்தில் தோன்றிய சிந்தனையே. பொது ஆண்டு 11 மற்றும் 13இல் வாழ்ந்த,இந்தியாவில் கொடுங்கோல் ஆட்சி மற்றும் கொள்ளையடித்த இஸ்லாமிய மன்னர்களான முஹம்மது கஜினி மற்றும் அலாவுதின் கில்ஜி போன்றோரும் ஓரினசெயர்க்கையாளர்களே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment