Saturday, June 4, 2016

வீட்டில் ஜின் வெளியில் பாம்பு

வீட்டிற்கு வெளியே வசிப்பது பாம்பு, வீட்டிற்குள் வசிப்பது பாம்பல்ல அது ஜின் ஆகும்



இஸ்லாமிலே ஜின்கள் என்பது ஒரு வகையான ஆவிகள், இவைகளில் நல்லவைகளும், தீயவைகளும் இருக்கின்றன என்று முஹம்மது கூறியுள்ளார். பாம்புகளை வெளியே கண்டால் கொல்லவேண்டுமாம். வீட்டிற்குள் பாம்புகளைக் கண்டால், அவைகளை கொல்லக்கூடாதாம், ஏனென்றால் அவைகள் வீட்டில் வசிக்கும் ஜின்கள் ஆகுமாம். விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் அவைகளை கொல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவைகள் மனிதர்களை கடித்து கொன்றுவிடுமே! முஹம்மது சொல்வதெல்லாம் ஒரு பாமர மனிதனின் ஞானமாகும். இவர் இறைவனின் உண்மை தீர்க்கதரிசியே அல்ல. விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் இன்றுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதனை அப்படியே வீட்டில் உலாவ விட்டுவிடுவார்களா? இப்படி தாறுமாறான போதனைகளைச் செய்தவர் உண்மை தீர்க்கதரிசி ஆகமுடியாது.

ஸஹீஹ் புகாரி 3298 & 4017
3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே)
கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள். Volume  Book :59
4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள். என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். Volume :4 Book :64

No comments:

Post a Comment